எல்லா பெண்களுக்கும் குண்டாக இருந்தாலும் ஒல்லியாக இருந்தாலும் இடை மட்டுமாவது மெலிந்து கொடி போல் இருக்க வேண்டும் என ஆசையாக இருக்கும். ஆசை யாரை விட்டது எனக்கும் அதே ஆசை தான். ஆனால் கண்ணாடியில் என்னை பார்த்தால் கண்ணாடி கூட வாய் விட்டு சிரிக்கும்.
நான் பெண் என்றாலும் எனக்கு heroines இடுப்பு பார்க்க ரொம்ப பிடிக்கும் அதிலும் எனக்கு சிம்ரன் இடை ரொம்ப பிடிக்கும். வாழ்க்கையில் ஒரு நாளாவது அந்த மாதிரி இடுப்புடன் இருக்கணும்னு கனவெல்லாம் கூட இருக்கு. ஆனால் 5feet height கும் 80kg weight கும் சிம்ரன் இடுப்பெல்லாம் கனவு தான். ஆசை listல கூட சேர்க்க முடியாது பேராசை listல தான் சேர்க்க முடியும்.
4 அல்லது 5வருடங்களுக்கு முன் ஒரு பிரபலமான paperல் சிம்ரன் போல இடை வேண்டுமா? என தலைப்பிட்டு ஒரு கட்டுரை வந்தது. அதில் பெரிதாக ஒன்றும் இல்லை simple exercise ஒன்று செய்ய சொல்லி இருந்தது. அதை படித்த பின் உடனே அந்த exercise செய்து simran இடுப்பு மாதிரி கொண்டு வர வேண்டும் என்று மறுபடி ஆசை வந்து விட்டது. ஆனால் நாளைக்கு செய்யலாம், காலையில் செய்யலாம் , night செய்யலாம்னு நாட்கள் தான் கடந்து போனது. அப்போது எனக்கு ஒரு நல்ல பழக்கம் எதாவது paper ல் பிடித்த மாதிரி வந்தால் அதை cut செய்து வைத்துக் கொள்வது.அப்படி தான் அந்த paper ம் cut செய்து வைத்திருந்தேன். அப்புறம் சின்ன சின்ன exercise, walking செய்து எடை 80kg லருந்து 65kg க்கு குறைந்தது.
எடை தான் குறைந்து விட்டதேனு அப்புறம் exercise எல்லாம் விட்டாச்சு. அப்புறம marriage ஆகி குழந்தை பிறந்த பிறகு எடை மறுபடி 80kg ஆக கூடி விட்டது. பாப்பாவ தனியாக பார்த்துக்கொள்வதால் exercise பண்ண simplea நடக்க கூட time இல்லை. உடம்பை கண்ணாடியில் பார்த்தால் ரொம்ப கவலையாக இருக்கு. இப்படியே போனால் 100kg தாண்டி போய்விடும் போல இருக்கு. என்ன பண்ணலாம்னு ரொம்ப நாளா யோசித்துக்கிட்டு இருந்தேன்.
எடை தான் குறைந்து விட்டதேனு அப்புறம் exercise எல்லாம் விட்டாச்சு. அப்புறம marriage ஆகி குழந்தை பிறந்த பிறகு எடை மறுபடி 80kg ஆக கூடி விட்டது. பாப்பாவ தனியாக பார்த்துக்கொள்வதால் exercise பண்ண simplea நடக்க கூட time இல்லை. உடம்பை கண்ணாடியில் பார்த்தால் ரொம்ப கவலையாக இருக்கு. இப்படியே போனால் 100kg தாண்டி போய்விடும் போல இருக்கு. என்ன பண்ணலாம்னு ரொம்ப நாளா யோசித்துக்கிட்டு இருந்தேன்.
போன மாசம் old cupboard பார்க்கும் போது பழைய cut பண்ண papersலாம் கிடைச்சுது. அதுல இந்த சிம்ரன் இடை paperம் கிடைத்தது. ரொம்ப சந்தோக்ஷமாக்க இருந்தது. மறுபடி சிம்ரன் இடை ஆசை வந்து விட்டது. இனி தள்ளி போட கூடாது என்று முடிவு செய்து உடனே ஆரம்பித்து விட்டேன்.
Exercise ரொம்ப simple தான் காலையில் முழித்ததும் படுக்கையை விட்டு எழும்பாமல் நேராக படுத்துக் கொள்ள வேண்டும். கைகள் இரண்டும் பக்கவாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியே படுத்துக் கொண்டு கால்களை தூக்கி முட்டியை மடித்து வயிற்றை தொட்டு செல்ல வேண்டும். தினமும் 100 times இதை செய்தால் தொப்பை எல்லாம் குறைந்து சிம்ரன் போல flat வயிறு கிடைக்கும்.
ஒரே நாளில் 100times செய்ய முடியாது. அதனால் முதலில் ஒரு வாரம் தினமும் 10times செய்து நன்கு பழகியதும் பத்து பத்தாக கூட்டி தினமும் 100times செய்யலாம். என்னால் தினமும் காலையில் செய்ய முடியவில்லை அதனால் night தூங்குவதற்கு முன் செய்து விட்டு தூங்குகிறேன். இந்த வாரம் தினமும் 40 செய்கிறேன். அடுத்த வாரம் இன்னும் 10 சேர்த்து 50 செய்ய வேண்டும்.
எனக்கு வயிறு கொஞ்சம் reduce ஆன மாதிரி இருக்கு பார்க்கலாம். இருந்தாலும் கூடவே பிறந்த சோம்பல் இருப்பதால் அடிக்கடி செய்யாமல் விட்டு விடுகிறேன். யாராவது தோழிகளுக்கு தொப்பை குறைய ஆசை இருந்தால் சொல்லுங்கள் நாம சொல்லி வைத்து விட்டு செய்யலாம். சேர்ந்து செய்யும் பொது சோம்பல் வராது.
தோழிகள் யாராவது என் கூட தொப்பை குறைக்க விரும்பினால் கீழே உள்ள Button i click பண்ணுங்க. நாம daily செய்து சிம்ரன் போல ஆகலாம்
Keep us motivated with your results... :-)
ReplyDeleteThank you for the tip.
Hi chitra akka
ReplyDeleteThanks for your comment.
"நானும் ஒருநாள் சிலிம்ரன் ஆகி காட்டுரேன்"
கவனமப்பா நம்ம பொண்ணுங்க கண்டபடி செஞ்சு. கேர்ணியா (குடலிறக்கம்) வரை போயிடுவாங்க.
ReplyDeleteகட்டுரை அருமை வாழ்த்துக்கள்.
Hi ம.தி.சுதா
ReplyDeleteThanks for your comment.
குடலிறக்கம் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல முடியுமா?
இந்த exercise safe இல்லியா?
சகோதரி நான் வன்னியில் ஒரு தனியர் உதவி மருத்தவராகக் கடமையாற்றியவன். அந்த அனுபவத்தில் தான் அப்படிச் சொன்னென். hernia என்பது உடலின் பலம் குறைந்த சுவர் பகுதி ஊடாக அல்லது சுவரில் காணப்படும் துவாரத்தினூடாக. சுவரிற்குள்ளிருக்கும் பகுதி வெளித்தள்ளுவது ஆகும். இதில் முக்கியமாக வயிற்றுப்பகுதியில் தான் அதிகமாக நடக்கிறது. lingunal hernia, umlical hernia (தொப்பிளில் வருவது) இப்படிப் பல இருக்கிறது.... சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் ஒன்று நீங்கள் சொல்லும் பயிற்சியால் இவை வருவதற்கு சந்தர்ப்பம் மிகக் குறைவு. ஏனெனில் இதை விடக் கடுமையான வயிற்று பயிற்சி செய்பவர்களும் இருக்கிறார்கள். முக்கியமாக ஒன்று இந்தப்பயிற்சியை படிப்படியாக செய்யச் செய்ய சுவர் மிகப்பலப்படையும். அதனால் இதை முற் குட்டியே குடலிறக்கத் தடுப்பாக இதைச் செய்வது மிக்க நல்லது....
ReplyDeleteநீங்க என்ன சிம்ரன் போல ஸ்லிமா இருபிங்கள
ReplyDeletehttp://www.raghuvarman.co.cc/
high quality designer replica cheap replica handbags replica wholesale handbags
ReplyDelete